Post

Share this post

காதலரால் விபச்சாரத்துக்கு தள்ளப்பட்ட பிரபல நடிகை!

திரையுலகில் ஒரு காலத்தில் கொடிகட்டிப் பறந்த நடிகைகள் பலர் சில ஆண்டுகளுக்கு பிறகு மீடியா வெளிச்சத்திலிருந்து காணாமல் போயிருப்பர். சில ஆண்டுகளுக்கு பிறகு அவர்களைப் பற்றிய செய்திகள் வெளியாகும்போது தான் அப்படி ஒரு நடிகை இருந்தது ரசிகர்களுக்கு நியாபகம் வரும். அப்படி ஒரு நடிகை தான் விமி.
பாலிவுட்டில் அவரது பயணம் குறைவான காலமே இருந்தாலும் அவரது நடிப்பால் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தார். ஆச்சரியம் என்னவென்றால் திருமணமாகி 2 குழந்தைகளுக்கு அம்மாவான பிறகே விமி திரையுலகில் அடியெடுத்து வைத்தார். ஆப்ரூ, ஹம்ராஸ், படாங்கா ஆகியவை விமி நடித்த படங்களில் முக்கியமானவை. பாலிவுட் ஸ்டார்ஸான சுனில் தத், சசி கபூர், ராஜ் குமார் உள்ளிட்டோருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
கடந்த 60 களில் விமி ஒரு படத்துக்கு ரூ.3 லட்சம் சம்பளமாக பெற்றிருக்கிறார். அவர் தனது கணவர் சிவ் அகர்வாலை பிரிந்த பிறகு ஏராளமான துயரத்தை அனுபவதித்திருக்கிறார். கணவரை பிரிந்த பிறகு வேறு ஒருவருடன் ரிலேசன்ஷிப்பில் இருந்திருக்கிறார். அவர் நடிகை விமியை விபச்சாரத்தில் தள்ளியதாக கூறப்படுகிறது. அவரது திருமணம் தோல்வியில் முடிந்த நிலையில் மதுவுக்கு அடிமையாகியிருக்கிறார்.
அவர் மதுவுக்கு அடிமையானபிறகு அவரது 10 வருட திரையுலக வாழ்க்கை முடிவுக்கு வருகிறது. அவரது வாழ்க்கையை விட அவரது மரணம் மிகக் கொடுமையானதாக இருந்தது. விமி தனது 34 வது வயதில் கல்லீரல் பிரச்னையால் கடுமையாக பாதிக்கப்பட்டு மரணமடைந்தார். அவர் வறுமையில் வாடியதால் அவருக்கு உரிய சிகிச்சை கிடைக்கவில்லை.
விமி இறந்தபோது அவரது இறுதிச்சடங்குகளை செய்ய ஒருவரும் முன்வரவில்லை. நடிகையாக இருந்தபோது விலையுயர்ந்த கார்களில் பயணித்த விமியின் உடல் சுடுகாட்டுக்கு கைவண்டியில் எடுத்துச்செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

Leave a comment