விஜய் டிவியின் முன்னணி தொகுப்பாளினி திவ்யதர்ஷினி. இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தொகுப்பாளினியாக இருக்கிறார். மேலும், தற்போது தொடர்ந்து வாராவாரம் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்காமல், முக்கிய சிறப்பு நிகழ்ச்சிகளை மட்டுமே தொகுத்து வழங்கி வருகிறார்.
தொகுப்பாளினியாக மட்டுமல்லாமல் நடிப்பிலும் கவனம் செலுத்தி வரும் டிடி, கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜோஷுவா இமைபோல் காக்க படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதுமட்மின்றி, சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்திலும், நடித்து வருகிறார்.
இப்படத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் உள்ளிட்ட பலரும் நடிக்கிறார். இந்நிலையில் அப்படத்தின் படப்பிடிப்பின் போது, யோகி பாபு, ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் உள்ளிட்டோருடன் டிடி சீட்டுக்கட்டு ஆடியுள்ளார். அந்த வீடியோவை நடிகர் ஜீவா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் பதிவு செய்துள்ளார்.