Post

Share this post

அண்ணியுடன் கள்ளக்காதல் – அண்ணனை தீர்த்துக்கட்டிய தம்பி!

உத்தரப் பிரதேசத்தின் முசாபர்நகர் பகுதியில் புர்காஜி பகுதியைச் சேர்ந்தவர் சாகர் அகமது (வயது 30). இவர் தனது மனைவி ஆயிஷாவுடன் வசித்து வந்த நிலையில், கடந்த ஜூன் 6 ஆம் திகதி சாகர் திடீரென மாயமானார். தனது கணவரை காணவில்லை என மனைவி ஆயிஷா அடுத்த நாள் பொலிஸாரிடம் புகார் அளித்தார். அதன் பேரில் பொலிஸார் விசாரணையை தொடங்கினர்.
பொலிஸார் விசாரணையில் ஆயிஷா மற்றும் அவரது சாகரின் சகோதரர் சொஹைல் என்பவர் மீது சந்தேகப் பார்வை திரும்பியது. சாகரின் வளர்ப்பு சகோதரரான சொஹைல் மற்றும் அவரது மனைவி ஆயிஷாவுக்கு கள்ளத்தொடர்பு இருப்பதாக பேச்சு எழுந்த நிலையில், இருவரையும் பிடித்து பொலிஸார் விசாரித்தனர்.
அப்போது தான் அதிர்ச்சி உண்மை வெளியே வந்தது. ஆயிஷாவுக்கும் சொஹைலுக்கும் நீண்ட காலமாகவே கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இது கணவர் சாகருக்கும் தெரியவந்த நிலையில், மனைவியை அவர் கண்டித்து வந்துள்ளார். அதை மீறியும் இருவரின் தொடர்பும் நீடித்து வந்துள்ளது. கடந்த ஜூன் 5 ஆம் திகதி அன்று தனது மனைவி ஆயிஷா சொஹைலுடன் நெருக்கமாக இருந்ததை கணவர் சாகர் பார்த்துள்ளார்.
இதைத் தொடர்ந்து தம்பதி இருவருக்கும் கடும் சண்டை ஏற்பட்ட நிலையில், இடையூறாக இருக்கும் கணவரை கொலை செய்ய ஆயிஷாவும் சொஹைலும் திட்டமிட்டனர். அதன்படி, இருவரும் சாகரை கழுத்தை நெறித்து கொலை செய்து உடலை வீட்டில் இருந்த செப்டிக் டேங்க் குழியில் புதைத்துள்ளனர். பின்னர் தான் கணவரை காணவில்லை என ஆயிஷா நாடகமாடியுள்ளார்.
இருவரிடமும் ஒப்புதல் வாக்குமூலம் பெற்ற பொலிஸார், புதைக்கப்பட்ட சாகரின் உடலை மலக்குழியில் இருந்து தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து. மேலும், ஆயிஷா மற்றும் சொஹைல் மீது கொலை வழக்கு பதிவு செய்து இருவரையும் சிறையில் அடைத்தது.

Leave a comment