ஆந்திராவில் ஆசிரமத்தில் தங்கியிருந்த 15 வயது சிறுமியை மிரட்டி பல மாதங்களாக பாலியல் பலாத்காரம் செய்து வந்த சாமியாரை பொலிஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர். இவர் கடந்த 2012 இல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது 2 வது முறையாக வசமாக சிக்கியுள்ளார்.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் வென்கோஜியில் ஞானானந்த ஆசிரமம் உள்ளது. இந்த ஆசிரமத்தின் நிர்வாக அதிகாரியாக சாமியார் பூர்ணானந்த சரஸ்வதி செயல்பட்டு வருகிறது.
இந்த ஆசிரமத்தில் தாய், தந்தை இல்லாதவர்கள், பெற்றோரால் கைவிடப்பட்ட குழந்தைகள் ஏராளமானவர்கள் வசித்து வருகின்றனர். இங்கு 15 வயது சிறுமி ஒருவரும் வசித்து வந்தார்.
இந்நிலையில் தான் சாமியார் பூர்ணானந்தா சரஸ்வதி, 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது கடந்த சில மாதங்களாக மடாதிபதி அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து வெளியில் சொன்னால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என மிரட்டல் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் அந்த சிறுமி சம்பவம் குறித்து வெளியில் கூற முடியாமல் மனம் நொந்து போனார். இதனை சாதகமாக பயன்படுத்தி கொண்ட மடாதிபதி பூர்ணானந்தா சரஸ்வதி, சிறுமியை தொடர்ந்து வலுக்கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த சிறுமி யாருக்கும் தெரியாமல் ஆசிரமத்தை விட்டு வெளியேறி ரயில் மூலம் விஜயவாடா சென்றார். அங்கு அவரை போலீசார் மீட்டு விசாரித்தனர்.
விசாரணையில் சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமைகளை அழுதபடி கூறியுள்ளார். இதை அடுத்து சம்பவம் குறித்து திஷா போலீசில் புகார் செய்யப்பட்டது. அந்த புகாரின் பேரில் பொலிஸார் போக்சோ வழக்குப்திவு செய்தனர். மேலும் சாமியார் பூர்ணானந்தா சரஸ்நதியை உடனடியாக நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். அதன்பிறகு அவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய பொலிஸார் சிறையில் அடைத்தனர்.
இதற்கிடையே தான் சாமியார் சிறுமிக்கு இழைத்த கொடூரம் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. இதுபற்றி உதவி பொலிஸ் கமிஷனர் விவேகானந்தா கூறுகையிால, ‛‛கடந்த ஓராண்டுக்கு மேலாக சிறுமிக்கு, சாமியார் பாலியல் தொல்லை கொடுத்து பலாத்காரம் செய்துள்ளார். இந்த கொடுமை தாங்க முடியாமல் பணியாளர் ஒருவரின் உதவியுடன் சிறுமி ஆசிரமத்தை விட்டு வெளியேறினார். அதன்பிறகு திருமலா எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறி விஜயவாடா சென்றார். அங்கு அவர் மீட்கப்பட்டார். குழந்தை நலக்கமிட்டி சார்பில் பொலிஸில் புகார் செய்யப்பட்டு கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.
தற்போது கைதான சாமியார் பூர்ணானந்தா சரஸ்வதி பாலியல் வழக்கில் சிக்குவது முதல் முறையல்ல. கடந் 2012 இல் 13 வயது சிறுமிக்கு ஆசிரமத்தில் பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் பொலிஸார் கைது செய்து இருந்தனர். இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் தற்போது அவர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.