Post

Share this post

உலக அமைதிக்காக நாடு முழுவதும் சைக்கிள் பயணம்!

உலக அமைதிக்காக நாடு முழுவதும் சைக்கிள் பயணம் வரும் வடமாநில காதல் தம்பதிக்கு மதுரை பாரதி யுவகேந்திரா மற்றும் காந்தி மியூசியம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.
மத்தியப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் ரோகித். இவரது மனைவி அஞ்சலி. இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
இந்த நிலையில் இவர்கள் இருவரும் உலக அமைதிக்காக கடந்த ஏப்ரல் மாதம் இருவரும் சைக்கிளில புறப்பட்டுள்ளனர்.
சைக்கிள் ஓட்டியபடியே மராட்டியம், கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்கள் சென்று பின்னர் தமிழகத்தில் கோவை வந்தனர். கோவையில் இருந்து திருநெல்வேலி வழியாக கன்னியாகுமரி சென்று விட்டு கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்டு தூத்துக்குடி, ராமநாதபுரம் வழியாக நேற்று ராமேசுவரம் வந்தனர். அதைத்தொடர்ந்து புதன்கிழமை மதியம் மதுரை காந்தி மியூசியம் வந்தனர்.
அவர்களுக்கு பாரதி யுவகேந்திரா நிறுவனர் நெல்லை பாலு மற்றும் காந்தி அருங்காட்சியக செயலாளர் நந்தாராவ் மற்றும் நடராஜன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மகாத்மாகாந்தியின் சுய சரிதை புத்தகம் வழங்கி கௌரவித்தனர்.
இது பற்றி ரோகித்-அஞ்சலி தம்பதி கூறியதாவது: மத்தியப்பிரதேசம் மாநிலம் ஜபல்பூரில் இருந்து சைக்கிள் பயணத்தை தொடங்கினோம். நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் சைக்கிள் ஓட்டியப்படியே செல்ல திட்டமிட்டுள்ளோம். லடாக்கில் எங்கள் பயணத்தை முடிக்க உள்ளோம். ராமேசுவரம், தனுஷ்கோடி வரை சென்று விட்டு மீண்டும் மதுரை வந்துள்ளோம். தென்காசி வழியாக கேரளா சென்று அங்கிருந்து மீண்டும் தமிழகம் வழியாக தெலங்கானா ஆந்திரம் உள்ளிட்ட பல மாநிலங்கள் செல்ல உள்ளதாக தெரிவித்தனர்.

Leave a comment