சீரியல் நடிகையும், பிக்பாஸ் பிரபலமுமான ரக்ஷிதா நள்ளிரவில் பதறியபடி சென்று தன்னுடைய கணவர் தினேஷ் மீது பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெங்களூரை சேர்ந்த ரக்ஷிதா, கன்னட சீரியல்களின் மூலம் தன்னுடைய சின்னத்திரை பயணத்தை துவங்கியவர். இதை தொடர்ந்து தமிழில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பிரிவோம் சந்திப்போம்’ சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்ட ரக்ஷிதா, இந்த சீரியலின் தன்னுடைய அழகை மறைத்து கொண்டு, கருப்பு நிற ஸ்கின் டோனில் நடித்திருந்தார்.
இந்த சீரியலில் ரக்ஷிதாவின் நடிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், ‘பிரிவோம் சந்திப்போம்’ சீரியலில் தனக்கு ஜோடியாக நடித்த, நடிகர் தினேஷையே காதலித்து பின்னர் பெற்றோர் சம்மதத்துடன் அவரை திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து சீரியல்களில் ரக்ஷிதா கவனம் செலுத்தி வந்தார். குறிப்பாக இவர் நடித்த சரவணன் மீனாட்சி, நாம் இருவர் நமக்கு இருவர் போன்ற சீரியல்கள் நல்ல வரவேற்பை பெற்றது. விஜய் டிவியை தொடர்ந்து, சன் டிவி, ஜீ தமிழ் போன்ற தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார் ரக்ஷிதா.
சரவணன் மீனாட்சி சீரியலில் இவரின் நடிப்பை பார்த்து அசந்து போன இயக்குனர் ராதா மோகன், தான் இயக்கிய ‘உப்பு கருவாடு’ படத்தில் இவரை, நடிகர் கருணாகரனுக்கு ஜோடியாக நடிக்க வைத்தார். இதை தொடர்ந்து, இப்படம் சொல்லிக் கொள்ளும்படி வெற்றி பெறாத காரணத்தால், தொடர்ந்து சீரியல்களில் கவனம் செலுத்த துவங்கினார்.
மேலும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாலராக கலந்து கொண்ட ரக்ஷிதா மகாலட்சுமி ஆரம்பத்தில் இருந்தே நேர்மையாகவும், நிதானமாகவும் தன்னுடைய விளையாட்டை விளையாடி வந்தார். இவருக்கென தனி ஆர்மி துவங்கி ரசிகர்கள் தங்களின் ஆதரவை தெரிவித்து வந்தனர். டைட்டில் வின்னராக மாறுவார் என எதிர்பார்க்கப்பட்ட லிஸ்டில் ரக்ஷிதாவின் பெயர் இருந்த போதிலும், கடைசி நேரத்தில் அதிக போட்டி காரணமாக நூற்றுக்கனனான ஓட்டுகள் குறைவால் வெளியேற்றப்பட்டார்.
இவர் பிக் பாஸ் வீட்டில் இருக்கும்போது, தன்னுடைய கணவர் குறித்து எதுவுமே பேசவில்லை. மாறாக தன்னுடைய அம்மா பற்றி மட்டுமே பேசினார். ஏற்கனவே ரஷிதாவுக்கும் தினேஷுக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக பிரித்து வாழ்வதாக கூறப்பட்ட நிலையில், அதனை பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது உறுதி செய்தார். எனினும் தினேஷ் தொடர்ந்து ரக்ஷிதாவுக்கு தன்னுடைய ஆதரவை தெரிவித்து வந்தார். தங்கள் இருவருக்குள்ளும் இருப்பது சாதாரண பிரச்சனை தான் என்றும், அதை மறந்து நிச்சயம் இணைந்து வாழ்வோம் என தெரிவித்தார்.
ஆனால் ரக்ஷிதா கணவரை விட்டு பிரியும் முடிவில் உறுதியாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ரக்ஷிதா தனது கணவர் தினேஷ் மீது நேற்று நள்ளிரவு மாங்காடு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த முறைப்பாட்டு மனுவில் கணவர் தினேஷ் தொடர்ந்து தனக்கு ஆபாச புகைப்படங்கள், மெசேஜ்களை அனுப்பி வருவதாகவும், தன்னை மிரட்டுவதாகவும் கூறியுள்ளார். இந்த முறைப்பாடு குறித்து தினேஷிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.