Bigg Boss 7 பற்றிய புதிய தகவல்!

விஜய் தொலைக்காட்சியில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு படு மாஸாக ஒளிபரப்பாகிய நிகழ்ச்சி தான் பிக்பாஸ்.
முதல் சீசனுக்கு பல பிரச்சனைகள், சர்ச்சைகள் எல்லாம் எழுந்தது, ஆனால் அடுத்தடுத்த சீசன்களுக்கு சொல்லவே வேண்டாம், நல்ல வரவேற்பு கிடைத்தது.
கடந்த 6வது சீசன் ஜனவரி 2023 தான் முடிவடைந்தது, இந்த சீசனின் வெற்றியாளராக அசீம் தேர்வு செய்யப்பட்டார், ஆனால் இந்த முடிவு பலருக்கு அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாகவே 7வது சீசன் குறித்து தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. அதன்படி இந்த 7வது சீசன் அக்டோபர் மாதம் இல்லை ஆகஸ்ட் மாதமே தொடங்க இருக்கிறதாம்.