சா்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஒருநாள் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் கிண்ண சுற்றுப் பயணம் அகமதாபாதில் செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது.
இந்தியாவில் வரும் அக்டோபா் 5 முதல் நவம்பா் 19 ஆம் திகதி வரை ஒருநாள் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது.
இதற்கான கிண்ண குறித்து அனைவரும் அறியும் வகையில் 18 நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளப்படுகிறது.
செவ்வாய்க்கிழமை அகமதாபாதில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் கோப்பையின் சுற்றுப் பயணம் தொடங்குகிறது, இதற்காக டுபாயில் திங்கள்கிழமை வித்தியாசமான முறையில் பூமியில் இருந்து 1.2 லட்சம் அடி உயரத்தில் வானத்தின் அடுக்கு மண்டலத்தில் பலூன் மூலம் கிண்ணம் வைக்கப்பட்டது.
பூமியின் மேற்பரப்பில் உலகக் கிண்ணத்தை வைத்து அட்டகாசமான முறையில் நவீன கேமராக்கள் மூலம் படம் பிடிக்கப்பட்டது.