விஜய் ஆண்டனியின் கொலை படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.
சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் 2016 ஆம் ஆண்டு வெளியான பிச்சைக்காரன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. தமிழ், தெலுங்கில் நல்ல வரவேற்பு கிடைத்ததால் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை விஜய் ஆண்டனி இயக்கி நடித்தார்.
பிச்சைக்காரன் திரைப்படம் மே 19 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமரிசனங்களைப் பெற்றது.
இதைத்தொடர்ந்து விஜய் ஆண்டனி நடிப்பில் பாலாஜி குமார் இயக்கத்தில் உருவாகிருக்கும் திரைப்படம் ‘கொலை’. இப்படத்தில் ரித்திகா சிங், மீனாட்சி செளவுத்ரி உள்பட பலர் நடித்துள்ளனர்.