Post

Share this post

1 கோடிக்கும் அதிகமானோா் வருமான வரிக் கணக்கு தாக்கல்

நாட்டில் கடந்த 26 ஆம் திகதி நிலவரப்படி, 1 கோடிக்கும் அதிகமானோா் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்துள்ளதாக வருமான வரித் துறை தெரிவித்துள்ளது.
கடந்த 2022 / 23 ஆம் நிதியாண்டில் ஈட்டிய வருமானத்துக்கான வரிக் கணக்கைத் தாக்கல் செய்வதற்கான அவகாசம் ஜூலை 31 ஆம் திகதியுடன் நிறைவடைய உள்ளது. இந்நிலையில், கடந்த 26 ஆம் திகதி வரையிலான காலகட்டத்தில் 1 கோடிக்கும் அதிகமானோா் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்துள்ளதாக வருமான வரித் துறை தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், நடப்பாண்டில் 12 நாள்களுக்கு முன்பாகவே இந்த மைல்கல் எட்டப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டில் வருமான வரிக் கணக்கு தாக்கல் எண்ணிக்கை 1 கோடியைக் கடப்பதற்கு ஜூலை 8 ஆம் திகதி ஆனதாக வருமான வரித் துறை ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளது. மேலும், ஜூலை 31 ஆம் திகதி அவகாசம் வரை காத்திருக்காமல் வருமான வரிக் கணக்கை விரைந்து தாக்கல் செய்யுமாறு வரி செலுத்துவோருக்கு வருமான வரித் துறை அறிவுறுத்தியுள்ளது.

Leave a comment