Post

Share this post

உலகக் கிண்ணத்தில் பாகிஸ்தான் பங்கேற்காது?

இந்தியா – பாகிஸ்தான் உறவுகள் மோசமான சூழ்நிலையில் உள்ளதால், உலகக் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி பங்கேற்குமா என கேள்வி எழுந்துள்ளது.
இரு நாடுகளும் இருதரப்பு தொடா்களில் ஆடாத நிலையில் சா்வதேச ஆட்டங்களில் மட்டுமே மோதுகின்றன. இந்நிலையில் இந்தியாவில் ஆட பாகிஸ்தான் அணிக்கு அந்நாட்டு அரசு அனுமதி தருமா எனத் தெரியவில்லை. இப்போட்டியில் இந்தியா – பாக். அணிகள் அகமதாபாதில் மோதும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், அவுஸ்திரேலியா, ஆப்கானிஸ்தானுடன் நடைபெறும் ஆட்டங்களுக்கான இடங்களை மாற்ற வேண்டும் என பிசிபி கோரியுள்ளது. ஆனால் அதை ஐசிசி நிராகரித்து விட்டது.
சென்னையில் ஆப்கானிஸ்தானுடன் நடைபெறும் ஆட்டத்தை பெங்களூருக்கும், ஆஸி.க்கு எதிராக பெங்களூரில் நடைபெறும் ஆட்டத்தை சென்னைக்கும் மாற்ற பிசிபி கோரியிருந்தது.
இந்தியாவில் ஒருநாள் உலகக் கிண்ண போட்டியில் பங்கேற்பது சந்தேகம் என பிசிபி தெரிவித்துள்ள நிலையில், பாகிஸ்தான் அணி கண்டிப்பாக வரும் என ஐசிசி நம்பிக்கை தெரிவித்துள்ளது.
பங்கேற்பதற்கான ஒப்பந்தத்தில் பாக். கையெழுத்திட்டுள்ளது. ஒவ்வொரு அணியும் தங்கள் நாட்டு விதிகளைப் பின்பற்ற வேண்டியுள்ளது. அதை ஐசிசி மதிக்கிறது எனத் தெரிவித்துள்ளது.
மேலும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவா் தோ்தலுக்கு பலுசிஸ்தான் உயா்நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், அந்நாட்டு கிரிக்கெட்டில் குழப்பம் நிலவி வருகிறது.

Leave a comment