நடிகர் அஜித்குமாரின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி திரைப்படத்தில் நடிகர் அஜித்குமார் நடித்து வருகிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷாவும், வில்லனாக அர்ஜுன் தாஸும் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், நடிகர் அஜித் குமார் வெளிநாட்டில் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ள நிலையில், ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.