இந்தியாவில் தக்காளி விலை விண்ணை முட்டும் அளவுக்கு அதிகரித்து வரும் நிலையில், மகாராஷ்டிராவில் ஒரு விவசாயி தக்காளி விற்று ஒரே மாதத்தில் பெரும் கோடீஸ்வரராகியுள்ளார்.
புனே மாவட்டத்தைச் சேர்ந்தவர் விவசாயி துக்காராம் பாகோஜி கயாகர். அவருக்குச் சொந்தமாக 18 ஏக்கர் விவசாய நிலம் இருக்கிறது. இதில் 12 ஏக்கரில் அவர் தக்காளி விவசாயம் செய்து வருகிறார்.
அவருடன் அவரது மகன் ஈஸ்வர் கயாகர், மருமகள் சோனாலி ஆகியோர் விவசாயம் செய்து வருகின்றனர். தக்காளி விலை எகிறியநிலையில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 13 ஆயிரம் பெட்டிகள் தக்காளி அறுவடை செய்து சந்தைப் படுத்தியுள்ளார்.
குறித்த விவசாயியின் தோட்ட தக்காளிகளுக்கு ஏற்கெனவே உள்ளூர் மற்றும் அக்கம்பக்கத்து கிராமங்களில் வரவேற்பு அதிகம். இந்நிலையில் ஒவ்வொரு பெட்டியை அவர் சுமார் ரூ.1,000 முதல் ரூ. 2,400 வரை விற்பனை செய்துள்ளார்.
இதன் மூலம் அவருக்கு இந்திய ரூபா மதிப்பில் 1.5 கோடி ரூபா வருவாய் கிட்டியுள்ளதாம்.