Post

Share this post

ரோபோ சங்கருக்கு அறிவுரை கூறிய கமல்!

தனியார் தொலைக்காட்சி காமெடி நிகழ்ச்சிகளில் மிமிக்ரி ஆர்டிஸ்டாக பயணத்தை தொடங்கியவர் ரோபோ சங்கர்.
அதன்பின்னர் தமிழ் திரையுலகில் தீபாவளி, வாயை மூடி பேசவும், மாரி, புலி, வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன், வேலைக்காரன், ஹீரோ, உள்ளிட்ட பல படங்களில் நகைச்சுவை நடிகராக வலம் வந்து ரசிகர்களை கவர்ந்தார். தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து பாராட்டுக்களை பெற்றார்.
சமீபகாலமாக அவரது உடல் மிகவும் மெலிந்து காணப்பட்டது. இதையடுத்து ரோபோ சங்கர் குறித்து பல வதந்திகள் பரவி வந்தன. பின்னர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ரோபோ சங்கர் என் உடம்பை நான் குறைத்ததற்கு காரணம் சினிமாவிற்காக தான், அதுமட்டுமல்லாமல் எனக்கு இடையில் மஞ்சள் காமாலை நோய் வந்துவிட்டது என்று வெளிப்படையாக கூறினார். தற்போது இவர் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி வருகிறார். அதுமட்டுமல்லாமல் பல படங்களிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன், ரோபோ சங்கருக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் போன் செய்து அவருடைய உடல்நலம் குறித்து விசாரித்துள்ளார். மேலும், தன் மகளுக்கு இன்னும் ஆறு மாதத்தில் திருமணம் நடைபெறவுள்ளதாகவும் திருமண தேதி குறித்து தற்போது வரை முடிவு செய்யப்படவில்லை என்றும் கண்டிப்பாக உங்களுக்கு கூறிவிட்டு தான் எதையும் செய்வேன் என்றும் ரோபோ சங்கர் கூறினார்.

Leave a comment