Post

Share this post

அனைத்து பிரச்னைகளுக்கு இதுதான் காரணம்!

துள்ளுவதோ இளமை படத்தில் அறிமுகமானவர் இயக்குநர் செல்வராகவன். காதல் கொண்டேன், மயக்கமென்ன, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் போன்ற நல்ல திரைப்படங்களை தமிழுக்கு கொடுத்தவர். இவரது இயக்கத்தில் கடைசியாக தனுஷுடன் நானே வருவேன் படம் வெளியானது.
இவர் நடிகை சோனியா அகர்வாலை 2006 இல் திருமணம் செய்து 2010 இல் விவாகரத்து செய்தார். பின்னர் கீதாஞ்சலி ராமனை 2011 இல் திருமணம் செய்தார். இவர்களுக்கு 3 குழந்தைகள் இருக்கிறார்கள். அடிக்கடி விவாகரத்து குறித்து தகவல்கள் பரவுவது இவரது விஷயத்தில் பழக்கமாகிவிட்டது. ஆனால் இவர் மகிழ்ச்சியான வாழ்க்கையே வாழ்ந்து வருகிறார்.
தற்போது படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். சமீபத்தில் பகாசூரன், பர்ஹானா படங்கள் வெளியானது. செல்வராகவன் ட்விட்டரில் அடிக்கடி பதிவிட்டு வருவார்.
இந்நிலையில் செல்வராகாவன் 90 சதவிகித பிரச்னைகளுக்கு காரணமானதைப் பற்றி பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில், “எதை சொல்ல வந்தாலும் இதை சொல்லலாமா என சில நொடிகள் யோசித்து விட்டு சொல்லுங்கள். 90 சதவீதம் பிரச்னைகள் அதிலேயே ஓய்ந்து விடும்!” எனக் கூறியிருந்தார். சரியாக சொன்னீர்கள், உண்மை என ரசிகர்கள் கமெண்டுகளில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
விஷாலுடன் நடித்துள்ள மார்க் ஆண்டனி திரைப்படம் விநாயக சதுர்த்தியன்று வெளியாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Leave a comment