Post

Share this post

இலங்கையில் 2 வகையான மருந்துகளுக்கு தடை!

இலங்கையில் மேலும் இரண்டு வகையான மயக்க மருந்துகள் தடை செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன Dr. Asela Gunawardena தெரிவித்துள்ளார்.
அனுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகார சபையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் பிரகாரம் இந்த இரண்டு வகை மயக்க மருந்துகளும் பாவனையில் இருந்து விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதாக வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
மேலும், தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு ஒருபோதும் அனுமதி கிடையாது எனவும், அரச மருந்தக கூட்டுத்தாபனத்தின் ஊடாக எப்போதும் தரத்திற்கு அமையவே மருந்துகள் இறக்குமதி செய்யப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment