தனது முன்னாள் கணவர் ராமராஜனை காதலிப்பதாக நடிகை நளினி உருக்கமாக பேட்டி அளித்துள்ளார். இது தொடர்பான அவரது பேட்டி ஒன்று ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது.
1980, 1990 ஆண்டுகளில் தமிழ் சினிமாவில் கொடிகட்டிப் பறந்த கதாநாயகர்களில் ராமராஜன் முக்கியமானவர். இவரது நடிப்பில் வெளிவந்த பல படங்கள் வெள்ளி விழா கண்டுள்ளன.
குறிப்பாக இளையராஜா இசையில் ராமராஜன் நடிப்பில் வெளிவந்த பாடல்கள் இன்றும் ரசிக்கப்பட்டு வருகிறது. இவரும், நடிகை நளினியும் மனசுக்கேத்த மகராசா, காவலன் உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்துள்ளனர்.
ராமராஜன் நடிகை நளினியை காதலித்து கடந்த 1987 ஆம் ஆண்ட திருமணம் முடித்தார். 2000 ஆம் ஆண்டில் விவகாரத்து பெற்றனர்.
தமிழ் சினிமாவில் பிரபல நட்சத்திர ஜோடியாக ராமராஜனும், நளினியும் வலம் வந்தனர். இந்த நிலையில் இன்றும் ராமராஜனை காதலிப்பதாக நளினி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் பேசிய வீடியோவில்,
நான் பிஸியாக இருந்த காலத்தில் ஆண்டுக்கு 24 படங்கள் வரை நடித்தேன். அப்போது தான் ராமராஜனை காதலித்தேன்.
நானும் சுரேஷும் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருந்த போது, நான் ராமராஜனுடன் ஓடிப்போக முடிவு செய்திருந்தேன்.
இதை சுரேஷிடம் சொன்னபோது அவர் பதறிப் போய் விட்டார். விரைவில் எங்கள் காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரிய வந்தது.
இதன் காரணமாக என்னை ராமராஜன் படங்களில் நடிப்பதற்கு பெற்றோர் அனுமதிக்கவில்லை. அந்த நேரத்தில் நிழல்கள் ரவியுடன் இணைந்து ஒரு படத்தில் நடித்தேன்.
அப்போது எங்கள் காதலுக்கு நிழல்கள் ரவி தூது போனார். இவையெல்லாம் மறக்க முடியாத அனுபவங்கள். ராமராஜன் நல்ல நடிகர்.
பாவம் தெரியாமல் என்னை காதலித்து திருமணம் செய்து கொண்டார். எங்கள் இருவரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை.
பிரிந்து விட்டோம். விவகாரத்து ஆனாலும் இன்றும் நான் ராமராஜனை காதலிக்கிறேன். இது அவருக்கும் தெரியும். என்று கூறியுள்ளார்.