Post

Share this post

Video Call மூலம் ஆபாச படம் – இருவர் கைது!

மத்திய அமைச்சர் ஒருவருக்கு கடந்த மாதம் வீடியோ கால் ஒன்று வந்துள்ளது. அந்த வீடியோ காலை எடுத்துள்ளார். அப்போது ஆபாச படம் பிளே ஆகியுள்ளது.
அதன்பின் மர்ம நபர் ஒருவர் போன் செய்து, இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடுவோம் என மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த மத்திய மந்திரி பொலிஸில் புகார் அளித்துள்ளார்.
புகார் அடிப்படையில் டெல்லி மாநில குற்றப்பிரிவு பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்போது ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த இருவர் மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. தீவிர விசாரணைக்குப்பின் தற்போது பொலிஸார் முகமது வகீல், முகமகது ஷாகிப் ஆகியோரை கைது செய்துள்ளனர்.
மேலும், இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் கைது செய்யும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார்கள்.

Leave a comment