Post

Share this post

மசாஜ் செய்யப்போய் மனைவியிடம் மாட்டிக்கொண்ட பொலிஸ்!

மாலம்பே, தலஹேன பிரதேசத்தில் உள்ள மசாஜ் நிலையமொன்றில் வைத்து நுகேகொட லஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவின் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை அவரது மனைவி பிடித்ததையடுத்து சண்டையில் ஈடுபட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
சப் இன்ஸ்பெக்டராக கடமை புரியும் இவர், கடந்த வாரம் ஒரு நாள் குறித்த மசாஜ் நிலையத்துக்குச் சென்றுளார்.
அங்கு , தனது உத்தியோகபூர்வ பொலிஸ் அடையாள அட்டையைக் காட்டி ஓர் அழகான யுவதியை மசாஜ் செய்ய அழைத்துச் சென்றுள்ளார்.
இந்நிலையில், அங்கிருந்த பெண் ஒருவர் இது தொடர்பில் அவரது மனைவிக்கு தெரிவித்ததையடுத்து, அங்கு வந்த அவரது மனைவி கணவரையும், மசாஜ் செய்துகொண்டிருந்த பெண்ணையும் கடுமையான வார்த்தைகளால் திட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டார் என பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் சம்பவம் தொடர்பில் மேல் மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபரின் உத்தரவின் பேரில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Leave a comment