Post

Share this post

வடக்கில் மற்றொரு அதிர்ச்சி வீடியோ!

திருமண வயதில் சகோதரி.. நடக்க முடியாத தந்தை.. குடும்பத்தைக் காப்பாற்றும் பொறுப்பில் உள்ள இளைஞன் போதைக்கு அடிமையாகி நடுவீதியில் நின்றுகொண்டிருக்கும் கொடுமை.
அந்த இளைஞன் கூறுகின்ற விடயங்கள் இன்னும் அதிர்ச்சிகரமானவை..
யாழில் போதைப்பொருட்களை யார் விநியோகிக்கின்றார்கள் என்ற பெயர் விபரங்களை அந்த இளைஞர் கூறியுள்ளார்.
அத்துடன் இலங்கை பொலிஸாருக்கு மாதாமாதம் எவ்வளவு கப்பம் செலுத்தப்படுகின்றது என்பது தொடர்பிலும் அந்த இளைஞர் தகவல் வெளியிட்டுள்ளார்.
தமிழ் இளைஞர்களது மாத்திரமல்ல கிட்டத்தட்ட தமிழர் தேசத்தின் ஒரு நேரடிப் பதிவு என்றும் இந்த ஒளிப்பதிவைக் கூறலாம்,
இதேவேளை அண்மையில் வவுனியா – தோணிக்கல் பகுதியில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் சுகந்தன் என்ற ஒரு இளைஞனும் அவனது மனைவியும் அடையாளம் தெரியாதவர்களினால் வெட்டியும், எரித்தும் படுகொலைசெய்யப்பட்ட சம்பவம் யாவரும் அறிந்ததே.
கொல்லப்பட்ட சுகந்தன் என்ற இளைஞன் அந்தப் பிரதேசத்தில் சுகந்தன் போதைப்பொருள் வியாபாரம், கட்டப்பஞ்சாயத்து போன்றனவற்றில் ஈடுபட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து யாழில் போதைக்கு அடிமையான குறித்த சம்பவம் அம்பலமாகியுள்ளது.

Leave a comment