திருமணத்தின் பின்னர் முதலிரவு அன்று கணவனுக்கு ஏற்பட்ட சந்தேகத்தை அடுத்து, மணப் பெண்ணின் தந்தை 9 வருடங்களின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் மொனராகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பூவக்கொட பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
தன்னுடைய மூத்த மகளை 13 வயதில் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரிலேயே பெண்ணின் தந்தை கடந்த 27ஆம் திகதியன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
13 வயதில், அச்சிறுமியின் தாய், தனது கணவனிடம் சிறுமியை விட்டுவிட்டு, வேறு ஒருவருடன் சென்றுவிட்டார்.. இந்நிலையில் சிறுமி, தனது தந்தையுடன் வளர்ந்துவந்த நிலையில், தந்தை, தனது மகளை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார்.
இதுதொடர்பில் தந்தையின் தாயிடம் சிறுமி தெரிவித்ததை அடுத்து, பாட்டி அவர்களுடன் வந்து தங்கியிருந்துள்ளார். அதன்பின்னர், தந்தையின் துன்புறுத்தல் நின்றுவிட்டது.
இந்நிலையில், உறவினர்களால் அப்பெண்ணுக்கு திருமணம் இடம்பெற்ற நிலையில் கணவனுக்கு முதலிரவில் ஏற்பட்ட சந்தேகத்தில் தந்தையால் தான் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட விடயம் வெளிச்சத்துக்கு வந்தது.
இது தொடர்பில் கணவனும், மனைவியும் பொலிஸில் செய்த முறைப்பாட்டு அமைய, 49 வயதான தந்தை ஒன்பது வருடங்களின் பின்னர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.