மும்பை – நாக்பூரை இணைக்கும் அதிவிரைவுச் சாலைப் பணியின்போது ராட்சத கிரேன் இயந்திரம் விழுந்த விபத்தில் 16 பேர் பலியாகினர். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
தானே மாவட்டத்தில் ஷஹாபுர் தெசில் பகுதியில் நடந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கிக் கொண்ட மேலும் 6 பேரை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதுவரை 16 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளனர். 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். மேலும் 6 பேர் விபத்து நடந்த பகுதியில் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம். என்று தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கிரேன் இயந்திரம் சரிந்து விழுந்தபோது நாங்கள் மறுபுறம் வேலை செய்து கொண்டிருந்தோம். இந்த சம்பவம் நடந்த நேரத்தில் சுமார் 30 பேர் அங்கு வேலை செய்து கொண்டிருந்தனர், என்று நேரில் பார்த்த ஒருவர் கூறினார்.
இந்த சம்பவம் திங்கள்கிழமை இரவு 11 மணியளவில் நடந்துள்ளது. தொடர்ந்து மீட்புப்பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.