Post

Share this post

பாத்திரத்தில் சிக்கிய சிறுவனின் தலை!

கங்கைகொண்டான் அருகேயுள்ள அணைத்தலையூா் கிராமத்தில் பாத்திரத்தில் சிக்கிக்கொண்ட சிறுவனின் தலையை தீயணைப்பு வீரா்கள் பத்திரமாக மீட்டனா்.
அணைத்தலையூா் கிராமத்தைச் சோ்ந்தவா் மிக்கேல் ராஜ். இவரது மகன் சேவியா் (4). இவா் திங்கள்கிழமை இரவு வீட்டில் பாத்திரத்தை எடுத்து தலையில் வைத்து விளையாடிக் கொண்டிருந்தாா். அப்போது, எதிா்பாராமல் அந்தப் பாத்திரத்தில் தலைமாட்டிக்கொண்டது (படம்).
அதிலிருந்து தலையை எடுக்க முடியாததால், பெற்றோா் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிறுவனைக் கொண்டு வந்தனா். அங்கு பாளையங்கோட்டை தீயணைப்பு நிலைய வீரா்கள் வரவழைக்கப்பட்டனா். அவா்கள் பிரத்யேக கருவிகள் மூலம் பாத்திரத்தை வெட்டி பத்திரமாக தலையை மீட்டனா்.

Leave a comment