விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ள கிழக்கு வாசல் தொடரின் ஒளிபரப்பு நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் தொடரை பார்ப்பதற்கு என்றே ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது கிழக்கு வாசல் என்ற புதிய தொடர் விரைவில் ஒளிபரப்பாகவுள்ளது.
நடிகர் விஜய் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ. சந்திரசேகர் நடிக்கும் கிழக்கு வாசல் தொடரில் நடிகர் ஆனந்த் பாபு வில்லன் பாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.
இந்தத் தொடரில் ரேஷ்மா முரளிதரன், தாரிணி, வெங்கட் ரங்கநாதன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ரடான் மீடியா சார்பில் நடிகை ராதிகா சரத்குமார் கிழக்கு வாசல் தொடரை தயாரிக்கிறார்.
இந்த வார இறுதியில் பாரதி கண்ணம்மா 2 தொடர் நிறைவடையவுள்ளது. அந்த நேரத்தில் கிழக்கு வாசல் தொடர் ஒளிப்பரப்பாக உள்ளது.
வரும் ஆகஸ்ட் 7 முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10 மணிக்கு ஒளிப்பரப்பாக உள்ளதாக தற்போது விஜய் டிவியில் ப்ரோமோ வெளியாகியுள்ளது.