Post

Share this post

கோலிக்கு முட்டுக்கட்டை? ரசிகர்கள் கொந்தளிப்பு!

விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் 76 சதங்களை நிறைவு செய்துள்ளார். டெஸ்டில் 29, ஒருநாள் போட்டியில் 46, டி20 யில் 1 என 76 சதங்கள் விளாசியுள்ளார். சச்சின் டெஸ்டில் 51, ஒருநாள் போட்டிகளில் 49 என மொத்தமாக சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதங்களை விளாசி முதலிடத்தில் இருக்கிறார்.

மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப் பயணம் செய்து டெஸ்டினை வென்ற இந்திய அணி ஒருநாள் தொடரினையும் கைப்பற்றும் முனைப்பில் உள்ளது. 1 – 1 என சம்நிலையில் உள்ள இந்த தொடருக்கு இது முக்கியமான போட்டியாக உள்ளது. ஒருநாள் உலகக் கிண்ண போட்டிகள் வரும்நிலையில் இளம் வீரர்களுக்கு அதிகமான வாய்ப்புகளை தந்து பரிசோதனை செய்து வருகிறது திராவிட்- ரோஹித் தலைமையிலான இந்திய அணி.

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சதங்கள் வரிசையில் விராட் கோலி 2 ஆம் இடத்தில் இருக்கிறார். மேற்கிந்திய தீவுகள் அணியுடனான போட்டியில் கோலிக்கு வாய்ப்பு மறுக்கபடுகிறதென அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மும்பை அணியினரின் ஆதிக்கம் பிசிசிஐயில் அதிகம் இருப்பதாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Leave a comment