Post

Share this post

மெதுவாக கொல்லக் கூடிய விஷம்!

மராத்தி படங்களில் அறிமுகமான நடிகை மிருணாள் தாக்குர் தமிழ் ரசிகர்களுக்கு சீதா ராமம் படத்தின் மூலம் கவனம் பெற்றார். துல்கர் சல்மானுடன் இணைந்து நடித்த இந்தத் திரைப்படம் பான் இந்தியப் படமாக வெளியாகி பெரும் வெற்றியை பெற்றது.
இதற்கடுத்து லஸ்ட் ஸ்டோரிஸ் 2 தொடரில் நடித்தும் மிருணாள் தாக்குர் புகழ் பெற்றார்.
தற்போது ஹிந்தி, தெலுங்கு படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். தமிழில் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தில் கதாநாயகியாக இவரை நடிக்க பேச்சுவார்த்தையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மிருணாள் தாக்குரின் இன்ஸ்டாகிராம் பதிவுகளுக்கென ரசிகர்கள் ஏராளம். இந்நிலையில் அவர் பகிர்ந்த புதிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது. 4 இலட்சத்திற்கும் அதிகமான லைக்குகள் பெற்றுள்ளன இந்த புகைப்படங்கள்.

இந்தப் புகைப்படத்திற்கு ரசிகர் ஒருவர், “ஸ்லோ பாய்ஸன்” (மெதுவாகக் கொல்லக்கூடிய விஷம்) என கமெண்ட் செய்துள்ளார்.

நடிகை ராஷி கண்ணாவும் இந்தப் படங்களுக்கு “லவ்” என கமெண்ட் செய்துள்ளார்.

Leave a comment