வரலாறு காணாத வெப்பம் காரணமாக ஈரானில் நாளை (03) மற்றும் நாளை மறுநாள் (04) பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய தெற்கு ஈரானில் உள்ள பல நகரங்கள் ஏற்கனவே பல நாட்கள் அதிகளவிலான வெப்பத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.
தெற்கு நகரமான அஹ்வாஸில் இந்த வாரம் வெப்பநிலை 123 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியதாக அரசாங்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அதேவேளை இந்த ஆண்டு அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் கடும் வெப்பம் நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.