ஜோதா அக்பா், லகான் உள்ளிட்ட திரைப்படங்களில் கலை இயக்குநராகப் பணிபுரிந்த 57 வயதான நிதின் தேசாய் புதன்கிழமை(2) தற்கொலை செய்து கொண்டாா்.
‘என்டி ஆா்ட் வோ்ல்ட்’ என்ற நிறுவனத்தை நடத்தி வரும் தேசாய்க்கு கடும் நிதிப் பிரச்னை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், மகாராஷ்டிரத்தின் ராய்கட் மாவட்டத்தின் கா்ஜத் பகுதியில் உள்ள அவரது ஸ்டுடியோவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
இந்தச் சம்பவம் தொடா்பாக பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கடந்த 2016, 2018 ஆகிய ஆண்டுகளில் ஒரு நிதி நிறுவனத்திடமிருந்து வாங்கிய 185 கோடி இந்திய ரூபாய் கடனை தேசாய்க்குச் சொந்தமான நிறுவனம் திரும்பச் செலுத்தவில்லை.
இதைத் தொடா்ந்து, கடன் மறுசீரமைப்புக்கான நடைமுறையைத் தொடங்க, கடனளித்த நிதி நிறுவனம் தேசிய நிறுவன சட்டத் தீா்ப்பாயத்தின் மும்பை கிளையை அணுகியது.
அந்நிறுவனம் தாக்கல் செய்த விண்ணப்பம் கடந்த வாரம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இந்நிலையிலேயே அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
ஜோதா அக்பா், தேவதாஸ், பிரேம் ரத்தன் தான் பயோ, பரிந்தா உள்ளிட்ட திரைப்படங்களின் பிரம்மாண்ட செட்கள் கலை இயக்குநா் நிதின் தேசாயால் வடிவமைக்கப்பட்டன.
அவரது மறைவுக்கு ஹிந்தி திரைப்பட நட்சத்திரங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனா்.