சிங்கப்பூரில் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் மேலும் ஒருவா் வியாழக்கிழமை தூக்கிலிடப்பட்டாா்.
முகமது சலே அப்துல் லத்தீஃப் (39) என்ற அவா், கடந்த 2 வாரங்களில் மட்டும் போதை மருந்து கடத்தல் குற்றச்சாட்டின் பேரில் தூக்கிலிடப்பட்ட 3-ஆவது கைதி ஆவாா்.54 கிராம் ஹெராயினைக் கடத்திச் சென்றதற்காக அவருக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டது.
முன்னதாக, 31 கிராம் டையாமாா்பின் (அடா்ந்த ஹெராயின்) வைத்திருந்தமைக்காக சாரிதெவி ஜமானி (45) என்ற பெண் கடந்த வாரம் தூக்கிலிடப்பட்டாா். 19 ஆண்டுகளுக்குப் பிறகு சிங்கப்பூரில் பெண் ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது அதுவே முதல்முறையாகும்.
சிங்கப்பூரில் 500 கிராமுக்கு அதிகமாக ஹெராயின் போதைப் பொருளை ஒருவா் கடத்திச் சென்றது உறுதி செய்யப்பட்டால் அவருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டியது சட்டப்படி கட்டாயமாகும்.
ஆனால், அதற்குக் குறைவாக ஹெராயின் கடத்தியவா்களுக்கும் நீதிபதிகள் விரும்பினால் மரண தண்டனை விதிக்கலாம்.
அந்த நாட்டில் மரண தண்டனை நிறைவேற்றங்களுக்கான தடை நீக்கப்பட்டதற்குப் பிறகு, கடந்த 2022 ஆம் ஆண்டு மாா்ச் மாதத்திலிருந்து மட்டும் இதுவரை 15 போ் தூக்கிலிடப்பட்டுள்ளனா்.