தென்னிந்திய சினிமாவின் முன்னனி நடிகரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த தர்பார் திரைப்படத்தில் வில்லன் காதப்பாத்திரத்தில் நடித்த சுனில் ஷெட்டி இலங்கை வந்துள்ளார்.
ஹிந்தி திரையுலகை சேர்ந்த பிரபல நடிகரான சுனில் ஷெட்டி, நடிகர் ஷாம் நடித்த 12B திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர்.
இவர் மெல்போர்னில் இருந்து கொழும்புக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன் நிறுவனத்தின் UL 605 என்ற விமானத்தில் இலங்கைக்கு வந்துள்ளார்.
இது குறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இதேவேளை, கடந்த சில வாரங்களுக்கு முதல் நடிகர் ரஜினி இலங்கை வந்து சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.