Post

Share this post

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் இலங்கைக்கு!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
யுனிசெப் சிறுவர் அமைப்பின் தெற்காசியாவிற்கான பிராந்திய நல்லெண்ண தூதுவராக இவர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

இவர் ஐக்கிய நாடுகளின் சிறுவர் அமைப்பான யுனிசெபின் நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளார். இதன்போது சிறுவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை சந்திக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து இலங்கைக்கான தமது விஜயம் தொடர்பான அறிக்கையை அவர் வெளியிடுவார் என தகவல்கள் குறிப்பிடுகின்றன.

Leave a comment