காதல் ஜோடி செய்த வேலையை பாருங்கள்! (வீடியோ)

சத்தீஸ்கர் மாநிலத்தில் ஊடல் காரணமாக காதல் ஜோடி ஒன்று உயர் மின்னழுத்த டவரின் உச்சிக்கு ஏறி காவல்துறையினரை பதைபதைக்கச் செய்தது.
சத்தீஸ்கர் மாநிலம் ஜிபிஎம் ஏரியா இன்று மதியம் அல்லோலகல்லோலப்பட்டது. இதற்கு காரணம் ஒரு காதல் ஜோடி. 150 அடி உயரமுள்ள உயர் மின்னழுத்த தடத்தில் அமைந்திருக்கும் டவர் ஒன்றில் காதல் ஜோடி ஒன்று கிடுகிடுவென ஏறியது.
முதலில் காதலி ஏற பின்னாலே காதலனும் தொடர்ந்து ஏற, அதனைக் கண்ணால் கண்டவர்கள் அதிர்ந்து போய் காவல்துறைக்கு தகவல் தந்தனர். போலீஸாரும் விரைந்து வந்து ஸ்பீக்கர் வைத்து, டவர் உச்சிக்கு ஏறியிருந்த காதல் ஜோடியிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அந்த ஜோடியோ போலீஸாரின் வருகை மற்றும் பேச்சுவார்த்தையை சட்டை செய்யவே இல்லை. காரணம் டவர் உச்சியில் காதலன் – காதலி இடையே இன்னொரு பேச்சுவார்த்தை ஓடிக்கொண்டிருந்தது.
அதன் பின்னணி விவகாரம் அவர்கள் பிற்பாடு கீழிறங்கிய பின்னரே தெரிய வந்தது. அனிதா – முகேஷ் இருவரும் காதலர்கள். இன்றைய தினம் இருவரிடையே திடீரென ஊடல் எழ, அனிதா கோபித்துக்கொண்டு மளமளவென உயர் மின்னழுத்தக் கம்பத்தில் ஏற ஆரம்பித்துவிட்டார். அவரை சமாதானப்படுத்த முகேஷும் பின்னாலே ஏறி பேச்சுவார்த்தை நடத்த முற்பட்டார். இப்படியே இந்த ஜோடி கம்பத்தின் உச்சியில் அமர்ந்து தங்களது பிரச்சினை குறித்து மினி ’உச்சி மாநாடு’ நடத்தியது.
அதன் பிறகு, டவர் கீழே போலீஸார் மட்டுமன்றி ஊரார் மொத்தமும் கூடியதை அடுத்து இருவரும் கீழே இறங்கினர். அவர்கள் அள்ளிச் சென்ற போலீஸார், காவல் நிலையத்தில் வைத்து விசாரித்தபோது இன்னொரு விவகாரமும் வெளிப்பட்டது. காதலி அனிதா ஏற்கனவே மணமானவர் என்றும், அவர்களுடைய காதல் கண்ராவி என்பது திருமணத்துக்கு அப்பாலான முறையற்ற காதல் எனவும் தெரிய வந்தது. இதையடுத்து தங்கள் தலையில் அடித்தபடி போலீஸார் விசாரணையை தொடர்ந்து வருகின்றனர்.
சத்தீஸ்கர் அனிதா – முகேஷ் காதல் ஜோடி உயர் அழுத்த டவரில் ஏறிய சாகச வீடியோ இன்றைய தினத்தின் இந்திய வைரல் வீடியோக்களின் வரிசையில் சேர்ந்திருக்கிறது.
ये है सच्चा वाला प्यार…😍😊
छत्तीसगढ़ में प्रेमी से नाराज प्रेमिका हाई टेंशन टावर पर चढ़ी, मनाने के लिए प्रेमी भी चढ़ा
आधे घंटे बाद दोनों नीचे उतरे, मामले की जांच में जुटी पुलिस#Chhattisgarh #FriendshipDay #chhattisgarhkekaka #viralvideo #LoveStory pic.twitter.com/6jc1XD0MKT
— Shailendra Singh (@Shailendra97S) August 6, 2023