Post

Share this post

TV ரிமோட்டை உடைத்ததால் பெற்றோருக்கு பயந்து சிறுமி தற்கொலை!

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே, டி.வி. ரிமோட்டை உடைத்ததால் பெற்றோருக்கு பயந்து 7 ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேட்டூர் அடுத்த நங்கவள்ளி பாசக்குட்டையை சேர்ந்த கூலித் தொழிலாளி சக்திவேல். இவரது மனைவி ரூபிணி. இந்த தம்பதிக்கு கவியரசி, பிரபா ஆகிய 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கவியரசி, அரசு பெண்கள் பள்ளியில் 7 ஆம் வகுப்பு பயின்று வந்தார். பெற்றோர் வேலைக்குச் சென்ற நிலையில், வீட்டில் சிறுமிகள் இருவரும் டி.வி. பார்த்துக் கொண்டிருந்தனர்.
இந்த நிலையில், கவியரசி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். சகோதரிகளிடையே டி.வி. பார்ப்பதில் ஏற்பட்ட தகராறில் கவியரசி டி.வி. ரிமோட்டை உடைத்ததாகவும், பின்னர் பெற்றோருக்கு பயந்து வீட்டின் கதவை தாழிட்டு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகவும் போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்தது.

Leave a comment