Post

Share this post

தலைகீழாக மாறிய அமெரிக்க டொலரின் பெறுமதி!

கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் நேற்று (07) இலங்கையின் வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது.
மக்கள் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை ரூ.311.42 இல் இருந்து ரூ.312.39 ஆகவும், விற்பனை விலை ரூ.326.74 இல் இருந்து ரூ.327.76 ஆகவும் அதிகரித்துள்ளது.
கொமர்ஷல் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்வனவு பெறுமதி 309.78 ரூபாவிலிருந்து 312.75 ரூபாவாக அதிகரித்துள்ளதுடன், விற்பனை பெறுமதி 325 ரூபாவிலிருந்து 328 ரூபாவாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பத் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை விலைகள் முறையே ரூ.313 இல் இருந்து ரூ.316 ஆகவும், ரூ.325 இல் இருந்து ரூ.328 ஆகவும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment