Post

Share this post

அதிகரித்த மசகு எண்ணெய்யின் விலை!

உலக சந்தையில் நேற்றைய தினமும் மசகு எண்ணெயின் விலை சற்று அதிகரித்து காணப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, டபிள்யூ. ரி. ஐ மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 83.6 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.
இவ்வாறான நிலையில், பிரென்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை நேற்றைய தினம் 86.50 அமெரிக்க டொலராக அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
இதேவேளை, இயற்கை எரிவாயு பீப்பாய் ஒன்றின் விலையும், அதிகரிப்பை பதிவு செய்து 2.59 அமெரிக்க டொலராக காணப்படுகிறது.

Leave a comment