Post

Share this post

பிரபல இயக்குனர் சித்திக் காலமானார்

தமிழில் வெளியான ப்ரண்ட்ஸ், எங்கள் அண்ணா, காவலன், பாஸ்கர் ஒரு ராஸ்கல் ஆகிய படங்களை இயக்கியவர் இயக்குனர் சித்திக்.
கடந்த சில ஆண்டுகளாக, கல்லீரல் பிரச்சினைக்காக சித்திக் தொடர்ந்து சிகிச்சை மேற்கொண்டு வந்தார். அவரின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில் அவருக்கு எதிர்பாராதவிதமாக மாரடைப்பு ஏற்பட்டது.
இதையடுத்து கேரளா மாநிலம், கொச்சியில் உள்ள அம்ரிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு எக்மோ சிகிச்சை கொடுக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த தகவல் மலையாள திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a comment