Post

Share this post

15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 18 வயது இளைஞன்!

மட்டக்களப்பு வாகரையில் 15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 18 வயதுடைய இளைஞன் ஒருவரை  செவ்வாய்க்கிழமை (08) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வாகரையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் 15 வயதும் 8 மாதம் கொண்ட சிறுமி 18 வயதுடைய இளைஞனை காதலித்து வந்துள்ளார்.
நிலையில், சிறுமியை 3 மாத கர்ப்பமாக்கியதையடுத்து அவர்கள் இருவரையும் அவர்களது பெற்றோர் சேர்த்து வைத்ததையடுத்து இருவரும் கணவன் மனைவியாக குடும்பமாக வாழ்ந்து வந்துள்ளனர்.
இது தொடர்பாக சிறுவர் நன்நடத்தை உத்தியோகத்தர்களுக்கு கிடைத்த தகவல் பிரகாரம் சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 18 வயது இளைனுக்கு எதிராக கடந்த முதலாம் திகதி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.
இதனையடுத்து, சிறுமியும் இளைஞ்னும் ஒழிந்திருந்த நிலையில் இளைஞனை   செவ்வாய்க்கிழமை (08) கைது செய்ததுடன் பாதிக்கப்பட்ட சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
கைது செய்யப்பட்ட இளைஞனுக்கு எதிராக சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் மோற்கொண்ட குற்றசாட்டின் கீழ் வழக்கு தாக்குதல் செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a comment