மனைவி ஒருவர் மரணப் படுக்கையில் தனது இறுதி ஆசையை வெளிப்படுத்த கணவர் பெரும் அதிர்ச்சிக்கு ஆளானார். அப்படி மனைவி என்ன இறுதி ஆசையை வெளிப்படுத்தினார் என்பது குறித்து கணவர் சமூக வலைதளத்தில் பதிவிட அந்த பதிவு கவனம் பெற்று வருகிறது.
கணவர் ரெடிட் என்ற தளத்தில் கூறியிருப்பதாவது :
மரண படுக்கையில் எனது மனைவி தெரிவித்த இறுதி ஆசையை என்னால் நிறைவேற்றவோ அதற்கு ஒப்புக்கொள்ளவோ முடியாது. எனது மனைவி இன்னும் 9 மாதங்களில் உயிரிழந்து விடுவார் என்று மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். அந்த சூழலில் அவரது இறுதி ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்ற கடமை எனக்கு இருக்கிறது. அவர் என்னிடம் சொன்ன அனைத்தையும் நான் நிறைவேற்றிக் கொடுக்கவில்லை.
தனது முன்னாள் கணவருடன் ஒருமுறை உடலுறவு கொள்ள வேண்டும் என்றும் அதுதான் தனது இறுதி ஆசை எனவும் கூறியிருந்தார். அவருடன்தான் உடலுறவு முழுமை பெற்றதாக மரண படுக்கையில் இருக்கும் மனைவி தெரிவித்தார். இது எனக்கு பேரதிர்ச்சியை கொடுத்தது. இந்த ஆசையை நிறைவேற்றிக் கொடுக்க எனது மனம் ஒப்புக்கொள்ளவில்லை. அவளது விருப்பங்கள் இனிமேல் நிறைவேற்ற வேண்டும் என்ற தீர்மானத்தில் இருந்தேன். ஆனால் அவர் கூறியது எனக்கு நெருடலைக் கொடுத்தது. என்று கூறியுள்ளார்.
இந்த பதிவுக்கு கமென்ட் செய்துள்ள நெட்டிசன்கள் அவர் தனது மனைவியை விவாகரத்து செய்ய வேண்டும் என்று பரிந்துரை செய்தனர். இன்னொரு பதிவர், இது உண்மையாக இருந்தால், அவரை விவாகரத்து செய்யுங்கள். அவரது கடைசி மாதங்களை முழுமையாக வாழ்ந்து, நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் இறக்கச் சொல்லுங்கள் என்று கூறியுள்ளார்.