அமெரிக்காவில் உயிருக்கு போராடிய 10 வயதான சிறுமிக்கு அவரது விருப்பின் பேரில் பெற்றோர் திருமணம் செய்துவைத்த நிலையில் திருமணம் முடிந்து 12 நாட்களில் அச்சிறுமி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இந்த துயரசம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
அமெரிக்காவை சேர்ந்த அலினா- ஆரோன் எட்வர்ட் தம்பதியின் மகள் எம்மா. 10 வயதான இந்த சிறுமி கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் , சிறுமி சில நாட்கள் மட்டுமே உயிர் வாழ்வார் என கூறினர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் சிறுமியின் கடைசி ஆசையை கேட்டுள்ளனர்.
அதற்கு , தான் சிறுவயதில் இருந்து காதலித்து வரும் டேனியல் மார்ஷலை திருமணம் செய்ய வேண்டும் என கூறி உள்ளார்.
இதனையடுத்து மகளின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடிவு செய்த பெற்றோர் டேனியல் மார்ஷலின் பெற்றோரிடம் பேசி இருவருக்கும் திருமணம் செய்து வைத்துள்ளனர்.
கடந்த ஜூன் 29 ஆம் திகதி சிறுமிக்கு இருவீட்டாரும் இணைந்து திருமணம் செய்து வைத்துள்ளனர்.
இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி இருந்த நிலையில் திருமணம் நடைபெற்ற 12 நாட்களில் அந்த சிறுமி பரிதாபமாக உயிரிழந்ததாக கூறப்படுகின்றது.