Post

Share this post

அழுகையை நிறுத்த குழந்தைக்கு மதுவை கொடுத்த தாய்!

குழந்தை அழுவதை நிறுத்துவதற்காக பால் போத்தலில்  மதுவை ஊற்றி தாய் கொடுத்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பான தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. மருத்துவர்கள் பரிசோதித்ததில் குழந்தை மதுவை குடித்து விட்டு போதையில் இருந்ததும் தெரியவந்துள்ளது. இந்த கொடூர செயலை செய்த தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சென் பெர்னார்டினோ நகரில்தான் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. இங்கு 37 வயதாகும் ஹானஸ்டி டீ லா டோரி என்பவர் காரில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவரது குழந்தை தொடர்ந்து அழுது கொண்டே இருந்துள்ளது. கைவசம் பால், பால் பவுடர் ஏதும் இல்லாத நிலையில், அங்கிருந்த மதுவை பால் பாட்டிலில் மதுவை ஊற்றிக் கொடுத்துள்ளார். குழந்தையும் பசி தாங்க முடியாமல் மது நிறைந்த பாட்டிலை குடித்து அழுகையை நிறுத்தியுள்ளது.
இந்நிலையில், வழக்கமாக நடத்தப்பட்ட வாகன சோதனையின்போது தாயாரின் செயல்கள் சந்தேகம் ஏற்படுத்தியதை தொடர்ந்து பொலிஸார் குழந்தையை ஆய்வு செய்தனர். அதில் குழந்தையும் போதையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு தாயிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இதில் அவர் உண்மையை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரை கடந்த சனிக்கிழமையன்று பொலிஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.
தற்போது குழந்தை மருத்துவமனையில் வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

Leave a comment