ஜப்பானில் வீசிய லான் புயல் காரணமாக பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த புயல் கரையை கடந்து பலத்த மழை கொட்டித் தீர்ப்பதால் அங்கு ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியுள்ளது.
மேலும், அங்கு விமானப் பயணங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதோடு வீடுகளின் மின்சார விநியோகமும் துண்டிக்கப்படலாம் என்று கூறப்பட்டுள்ளது. .
இதனிடையே, ஜப்பான் கடலை அடைந்து, அங்கிருந்து வடக்கே இந்த லான் சூறாவளி தொடரும் என்று ஜப்பான் வானிலை நிறுவனம் தெரிவித்துள்ளது.