Post

Share this post

புகைப்பழக்கம் தொடர்பில் அரசு எடுத்துள்ள அதிரடி முடிவு!

பிரித்தானியா 2030-க்குள் புகைப்பழக்கத்தை ஒழிக்க உறுதி பூண்டுள்ளதாக அந்த நாட்டின் சுகாதார மந்திரி ஸ்டீவ் பார்க்லே கூறினார்.
பிரித்தானியாவில் புகைப்பிடித்தல் பழக்கத்தால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.
இதன் காரணமாக நாட்டில் ஆண்டுக்கு சுமார் ஐந்து லட்சம் பேர் புற்றுநோய், மாரடைப்பு உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்படுகின்றனர்.
இதனால் தனிநபருக்கு மட்டுமின்றி அரசாங்கத்துக்கும் சுகாதார செலவுகள் அதிகரித்து வருகின்றன.
இவ்வாறான நிலையில், இதனை குறைக்க அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
அதன் ஒருபகுதியாக சிகரெட் பாக்கெட்டுகளில் அதனால் ஏற்படும் பாதிப்புகளையும், புகைப்பழக்கத்தை கைவிடும்போது ஏற்படும் நன்மைகளையும் குறிப்பிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
இதன் மூலம் வருகிற 2030-ம் ஆண்டுக்குள் புகைப்பழக்கத்தை முற்றிலும் ஒழிக்க அரசாங்கம் உறுதி பூண்டுள்ளதாக அந்த பிரித்தானிய சுகாதார மந்திரி ஸ்டீவ் பார்க்லே கூறினார்.

Leave a comment