Post

Share this post

அசானிக்கு குவியும் பணம், சொத்து மற்றும் வாய்ப்பு!

 

தமிழகத்தில் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஷோக்களில் ஒன்று தான் சரிகமப. இந்த நிகழ்ச்சியில் இலங்கை, இந்தியா, பிரித்தானியா, அமெரிக்கா என பல நாடுகளில் உள்ள தமிழ் மற்றும் மொழிகளை சேர்ந்த சிறுவர்கள் போட்டியாளர்களாக கலந்துகொள்கின்றனர்.
இந்நிலையில் இலங்கை – யாழ்ப்பாணத்தை சேர்ந்த கில்மிஸா என்பவர் சரிகமப நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பாடி வருவதுடன் அவர் மிகவும் பிரபல்யமான போட்டியாளராகவும் இருக்கிறார்.
மற்றுமொறு இலங்கை சிறுமியாக இலங்கையின் மலையகத்தில் இருந்து அசானி பங்குபற்றியுள்ளார்.
கண்டி, புச்சலாவயை சேர்ந்த மாணவி கனகராஜ் அசானிக்கு தற்போது உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் தமது ஆதரவை தெரிவித்து வருவதுடன், அசானிக்காக பணம், சொத்து மற்றும் வாய்ப்புகளையும் வழங்கி வருகின்றனர்.

Leave a comment