Post

Share this post

X தளத்தில் விரைவில் நீக்கப்படவுள்ள விடயம்!

எக்ஸ் (டுவிட்டர்) தளத்தில் ப்ளாக் (Block) செய்யும் வசதி விரைவில் நீக்கப்பட இருப்பதாக அதன் உரிமையாளர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
இது பயனர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் கடந்த ஆண்டு வாங்கியதிலிருந்து பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் தற்போது மற்றுமொரு மாற்றத்தை கொண்டு வர இருப்பதாக அறிவித்துள்ளார்.
இனி எக்ஸ் பயனர்கள் தங்களுக்கு பிடிக்காத பயனர்களின் கணக்குகளை ப்ளாக் செய்ய முடியாது. அதற்கு பதிலாக அவர்களிடமிருந்து வரும் குறுஞ்செய்திகளை மட்டுமே மியூட் செய்ய முடியும்.
அவர்களது பதிவுகள் நமது டைம்லைனில் வருவதை தடுக்க இயலாது. இது எக்ஸ் பயனர்களுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது எக்ஸ் தளத்தில் இருக்கும் ப்ளாக்கிங் வசதியின் மூலம் பயனர்களின் பதிவுகள் மற்றும் குறுஞ்செய்திகள் இரண்டையுமே தடுக்க முடியும்.
இந்த வசதியை நீக்குவதால் பின்னூட்டங்களில் வரும் வசைச் சொற்களையும், ஆபாச தாக்குதல்களை தடுக்க முடியாமல் போய்விடும் என்று பயனர்கள் பலரும் கவலை தெரிவித்துள்ளனர்.
மேலும் ஏற்கெனவே ப்ளாக் செய்யப்பட்ட பயனர்களின் கணக்குகளும் தானாகவே அன்ப்ளாக் (Unblock) ஆகுமா என்பது குறித்து இன்னும் விளக்கமளிக்கப்படவில்லை.
அதுமட்டுமின்றி, ப்ளாக்கிங் வசதியை நீக்குவது, ஆப்பிள் நிறுவனத்தின் ஆப் ஸ்டோர் மற்றும் கூகுள் ப்ளே ஸ்டோர் ஆகியவற்றின் விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் மீறுவதாக அமையும்.
இதனால் எக்ஸ் செயலி இந்த இரண்டு தளங்களில் இருந்தும் நீக்கப்பட வாய்ப்பு உண்டு.
ஆப்பிள் ஸ்டோர் மற்றும் கூகுள் ப்ளே ஸ்டோர் இரண்டிலும் பயனர்கள் எதிர்கொள்ளும் ஆன்லைன் தாக்குதல்களை ஃபில்டர் செய்யும் வசதிகளை செயலிகள் கட்டாயமாக கொண்டிருக்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a comment