Post

Share this post

மனைவியைக் கொன்று, தற்கொலை செய்ய முயன்ற கணவன்!

கனடாவின் கியூபெக்கில், கார் ஒன்றில் இளம்பெண் ஒருவரின் உயிரற்ற உடல் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அந்தக் காரிலிருந்த ஆண் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
சனிக்கிழமையன்று, கனடாவின் கியூபெக்கிலுள்ள Wickham என்னுமிடத்தில், Robyn-Krystle O’Reilly (34) என்னும் இளம்பெண்ணின் உடல் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திலிருந்த ஆண் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட நபர், Robyn-Krystleஇன் கணவர் என்றும், அவரது பெயர் Kevin Romagosa (39) என்றும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், அவர் தற்கொலைக்கு முயன்றதற்கான அடையாளங்கள் அவரது உடலில் காணப்பட்டதால், அவர் மருத்துவப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், Robyn-Krystle, Kevin தம்பதியர் வழக்கமான இளம் தம்பதியராக நடந்துகொண்டதாக தெரிவித்துள்ள அதே பகுதியில் வாழ்பவரான Sandy Shields, Kevin தன் வீட்டு தோட்டத்தை ஒழுங்குபடுத்த உதவுவதுண்டு என்றும், Robyn-Krystle தான் சமைக்கும் உணவைத் தன்னுடன் பகிர்ந்துகொள்வதுண்டு என்றும் தெரிவித்துள்ளார்.
எதனால் Kevin தன் மனைவியைக் கொலை செய்தார் என்பது தெரியவில்லை. தம்பதியருக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள்.
பொலிசார் இந்த துயர சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.

Leave a comment