Post

Share this post

யாருக்கு பிரபஞ்சம் உதவும் – நடிகையின் தத்துவம்!

தமிழ் மற்றும் மலையாளப் படங்களில் நடித்து வருபவர் நடிகை அமலா பால். விஜய்யின் தலைவா போன்ற பெரிய படங்களில் நாயகியாக நடித்தவர். இயக்குநர் ஏ.எல்.விஜய்யை காதலித்து திருமணம் செய்துகொண்ட அமலா பால் விரைவிலேயே அவரை விவாகரத்தும் செய்தார்.
சமீபத்தில் அவர் நடிப்பில் ஓடிடி வெளியீடாக வந்த ‘டீச்சர்’ ‘கிறிஸ்டோபர்’ படங்கள் கலவையான விமர்சனங்களைப் பெற்றன. இணையத் தொடர்களிலும் நடித்து வருகிறார்.
இன்ஸ்டாகிராமில் அமலா பால் புகைப்படங்களுக்கென்று தனி ரசிகர்கள் இருகிறார்கள். தற்போது புதிய புகைப்படங்களினை பகிர்ந்துள்ளார்.
அதில், “தனக்குத் தானே உதவிக்கொள்பவர்களுக்கு இந்த பிரபஞ்சமும் உதவும். அதனால் உங்களால் முடிந்ததை செய்யுங்கள்; மீதியை இந்த அதீத சக்தி பார்த்துக் கொள்ளும்” எனப் பதிவிட்டுள்ளார்.
மலையாளத்தில் மிகவும் புகழ்பெற்ற ஆடு ஜீவிதம் எனும் நாவலை படமாக எடுத்துள்ளார்கள். இதில் அமலா பால் ப்ரித்விராஜுடன் நடித்துள்ளார். இந்தப் படம் விரைவில் வெளியாக உள்ளது.
மேலும் அதோ அந்தப் பறவை போல திரைப்படமும் வெளியீட்டிற்கு காத்திருப்பில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a comment