18 வயதான இளம்பெண் தன் தோழியுடன் லண்டனிலிருந்து ஸ்பெயின் வந்து உள்ளார். அங்கு மகலாப் பகுதியில் அமைந்துள்ள பிஎச் மல்லோர்கா என்ற கேளிக்கை விடுதிக்குச் சென்று தங்கி உள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 14 ஆம் தேதி நள்ளிரவில் அந்த விடுதி மது பாரில் அப்பெண்ணிடம் அறிமுகமில்லாத சிலர் பேச்சுக்கொடுத்துள்ளனர். சிறிது நேரத்திற்குப் பின் அப்பெண்ணை வலுக்கட்டாயமாக விடுதியின் மற்றொரு பகுதிக்கு இழுத்துச்சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து உள்ளனர்.
அதிகாலை அந்த விடுதியின் காவலர் அரை நிர்வாணமாகக் கிடந்த அப்பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சேர்த்து உள்ளார். மேலும் போலீசாருக்கு தகவல் கொடுத்து உள்ளார். உடனடியாக, களத்தில் இறங்கிய ஸ்பெயின் போலீசார் மறு நாளே இக்குற்றத்தில் ஈடுபட்ட 6 பேரை கைது செய்து சிறை வைத்தனர். அதன்பின், இச்சம்பவம் தொடர்பாக மேலும் இருவரைக் கைது செய்துள்ளனர்.
இதில் கொடுமை என்னவென்றால் இச்சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் ஒரே குழுவைச் சேர்ந்தவர்கள் அல்ல. அனைவரும் ஒருவருக்கு ஒருவர் முன் பின் அறியாதவர்கள். மதுக்கூடத்தில் தனித்தனியாக அமர்ந்து குடித்துக்கொண்டிருந்தவர்கள். ஏதோ ஒரு கணத்தில் போதையின் பொருட்டு சேர்ந்துகொண்ட இவர்கள் தனிமையில் இருந்த அந்த இளம்பெண்ணிடம் பேச்சுக்கொடுத்து இந்தக் கொடுமையை நிகழ்த்தியுள்ளனர்.
பெண்ணை தாக்குவதையும், பாலியல் அத்துமீறல் செய்யும்போது சிரித்துக் கூச்சலிட்டதையும் குற்றவாளிகள் தங்கள் செல்போன்களில் வீடியோக்களாக பதிவு செய்துள்ளனர். அதில் ஒரு குற்றவாளி பாதிக்கப்பட்ட பெண்ணின் மொபைலையும் திருடிச் சென்றிருக்கிறார். விடுதியில் இச்சம்பவம் நடந்த பகுதியில் சிசிடிவி கேமரா இருந்தபோதும் இருந்தபோதும் குற்றவாளிகள் எடுத்த வீடியோக்களே அவர்களுக்கு எதிரான மிகப் பெரிய சாட்சியமாக இருக்கிறது.