இலங்கை மத்திய வங்கியானது நிதியியல் சட்டத்திற்கு முரணாக செயற்பட்ட 9 நிறுவனங்கள் மீதான தடையை அறிவித்துள்ளது.
அதன்படி தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டம் உள்ளிட்ட நிதியியல் மோசடிகளை ஊக்குவிக்கும் 9 நிறுவனங்களுக்கே இவ்வாறான தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டமொன்றினை நேரடியாக அல்லது நேரடியற்று தொடங்குகின்ற, வழங்குகின்ற, ஊக்குவிக்கின்ற, விளம்பரப்படுத்துகின்ற, கொண்டு நடாத்துகின்ற, நிதியளிக்கின்ற, முகாமைசெய்கின்ற அல்லது பணிக்கின்ற தனி நபர் அல்லது நிறுவனம் தண்டனைக்குரிய தவறொன்றிற்கான குற்றவாளியாக கருதப்படவேண்டும் என மத்திய வங்கி அறிவித்துள்ளது.