Post

Share this post

வித்தியாசமான கால்கள் – தீக்கோழி மனிதர்கள் – ஆச்சரிய தகவல்கள்!

உலகில் பல விதமான உயிரிழனங்கள் உள்ளன அவை நம்மை வியப்பில் ஆழ்த்தும் திறன் கொண்டவையாக இருக்கும். ஒவ்வொரு விலங்குகளுக்கும் ஒவ்வொரு தனிதன்மை இருக்கும். ஆனால் மனிதர்கள் விலங்குகளிடமிருந்து முற்றிலும் வேறுபட்டவர்கள். மனிதனின் நிறம், கலாச்சாரம், உணவு முறை ஆகியவை இடத்திற்கேற்ப வேறுபட்டு இருக்குமேயானால் மனிதனின் தோற்றம் ஒரே மாதிரியானதாக தான் இருக்கும்.
ஆனால் ஒரு பழங்குடி இனத்தவர்கள் மனிதர்களிடம் இருந்து சற்று வேறுபட்டு இருக்கிறார்கள். கலாச்சாரத்தில் மட்டுமல்ல உடல் ரீதியாகவும் வேறுபட்டிருக்கிறார்கள். அவர்கள் மனிதனின் உடல் அமைப்பையும் நெருப்புக்கோழியின் கால்களையும் கொண்டுள்ளனர்.
ஆம், ஜிம்பாப்வே நாட்டில் இருக்கும் ஒரு குறிப்பிட்ட பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்களின் முகம் மனிதர்களைப் போல இருக்கிறது. ஆனால் அவர்களின் கால்கள் நெருப்புக்கோழியின் கால்களைப் போல இருக்கிறது. இவர்களுக்கு காலில் இரண்டு அல்லது மூன்று விரல்கள் மட்டுமே உள்ளன.
உலகில் பிறந்த உயிர்களில் நூற்றில் ஒருவருக்கு அல்லது ஆயிரத்தில் ஒருவருக்கு உடலில் ஏதேனும் வித்தியாசங்கள் இருக்கும். குறிப்பாக மிக நீண்ட மூக்கு, பெரிய காதுகள், நீளமான நாக்கு உள்ளிட்டவை. இப்படிப்பட்ட மனிதர்கள் மிகவும் அரிதானவர்களாக கருதப்படுகின்றனர். ஆனால் ஒரு இனமே இப்படி வித்தியாசமான உடல் அமைப்பு கொண்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.
இவர்களின் தோற்றம் மனிதர்களைப் போன்றே இருந்தாலும், அவர்களின் பாதங்களைப் பார்த்தால் திகைத்துப் போவீர்கள். இவர்களின் கால்களின் அமைப்பு நம்மைப் போல 5 விரல்களுடன் இல்லாமல் 2 விரல்கள் மட்டுமே உள்ளன. டெய்லி ஸ்டார் என்ற ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியின் படி டோமா பழங்குடியினர் என்று அழைக்கப்படும் இந்த பழங்குடியின மக்கள் வாடோமா அல்லது பாண்ட்வானா பழங்குடியினர் என்றும் அழைக்கப்படுகிறார்கள்.
அவர்களின் பாதங்கள் நெருப்புக்கோழி போல இருப்பதால், அவர்கள் பெரும்பாலும் நெருப்புக்கோழி மக்கள் என்றும் அழைக்கப்படுகிறார்கள். இந்த பழங்குடியினர் ஜிம்பாப்வேயின் கன்யெம்பா பகுதியில் வசிக்கின்றனர். இந்த முழு சமூகமும் Ectrodactyly எனப்படும் ஒரு சிறப்பு மரபணு கோளாறால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதனால், அவர்களின் கால்களில் 5 க்கு பதிலாக 2 விரல்கள் மட்டுமே உள்ளன. இந்த மரபணு மாற்றம் லோப்ஸ்டர் க்ளா சிண்ட்ரோம் என்று அழைக்கப்படுகிறது. இந்த பிரச்னையால் இந்த பழங்குடியினத்தில் பிறக்கும் குழந்தைகள் பிறக்கும் போதே, பாதங்களில் முழுமையாக ஐந்து விரல்களும் இருப்பதில்லை. இரண்டு அல்லது மூன்று விரல்கள் தான் இருக்கின்றன. அந்த விரல்களும் உள்நோக்கி வளைந்து காணப்படுகிறது. டோமா பழங்குடியினரின் ஒவ்வொரு நான்காவது குழந்தைக்கும் இந்த பிரச்சனை இருப்பதாக நம்பப்படுகிறது.
பெரும்பாலான மக்கள் தங்கள் கால்களில் 3 விரல்களோடு தான் காணப்படுகிறார்கள். இந்தப் பழங்குடியின மக்கள் வேறு சமூகத்தில் திருமணம் செய்துகொள்வதை விரும்புவதில்லை. ஏனெனில் இரட்டை விரல்களுடன் பிறப்பதை அவர்கள் வரமாக நினைக்கிறார்கள். அவர்கள் வேறு இன மக்களுடன் கலந்தால் தங்கள் இரட்டை விரல் வரத்தை இழந்து விடுவதாக அஞ்சுகிறார்கள். இவர்களால் சரியாக நடக்கவோ, காலணிகள் அணியவோ முடியாது. ஆனால் மரம் ஏறுவதில் இவர்களை மிஞ்ச யாருமில்லை.

Leave a comment