Post

Share this post

குடிசைக்குள்ளே பெண் – 60 வயதில் அசிங்கப்பட்ட கொடுமை!

5 வருட கள்ளக்காதல், ஒரு கொலையில் வந்து முடிந்துள்ளது. வேலியே பயிரை மேய்ந்துவிட்டதால், 2 பேர் கைதாகி ஜெயிலுக்கு போயிருக்கிறார்கள்.
உத்தரப்பிரதேச மாநிலம் ரெபரேலி பகுதியை சேர்ந்தவர் மெஹந்தி லால்… 60 வயதாகிறது.. இவருக்கு ஒரு கள்ளக்காதலி இருக்கிறார்.. அவருக்கு 45 வயதாகிறது.. இந்த பெண்ணுக்கு ஒரு மகள் இருகிறார்.. அவருக்கு 19 வயதாகிறது.

கள்ளக்காதலி: இந்த கள்ளக்காதல் 5 வருடங்களுக்கு முன்பிருந்தே தொடங்கி உள்ளது. மகளுக்கு இப்போது 19 வயது என்றால், இந்த ஜோடி கள்ள உறவை தொடங்கியபோது, 14 வயது சிறுமியாக இருந்திருக்கிறார். தந்தை இல்லாமல் வளர்ந்த சிறுமிக்கு, தாயின் கள்ளக்காதல் குறித்து அந்த வயதில் அறியவில்லை.

இந்த கள்ளக்காதல் விவகாரம் ஊருக்கு தெரிந்துவிட்டது.. இதனால், பெண்ணின் குடும்பத்தில் பலமான எதிர்ப்பு கிளம்பியது.. கள்ளக்காதலை கைவிடுமாறும், வயதுக்கு வந்த மகள் இருப்பதால், இதுபோன்று செய்ய வேண்டாம் என்றும் பெண்ணை அறிவுறுத்தியிருக்கிறார்கள்.
குடிசை: ஆனால், மெஹந்திலால், கள்ளக்காதலியையும், அவரது மகளையும் அழைத்து வந்து, ஊருக்கு வெளியே குடி வைத்தார்.. ஊருக்கு ஓரமாக ஒரு குடிசை போட்டு, அதில் அவர்களை தங்க வைத்தார். இத்தனைக்கும் மெஹந்தி லாலுக்கென, மனைவி, மகன் என தனி குடும்பமே உள்ளது.
இப்படிப்பட்ட சூழலில், கடந்த 21ம் தேதி, மெஹந்திலால் இறந்துவிட்டார். உடம்பெல்லாம் காயங்களுடன் காட்டுப்பகுதியில் விழுந்து கிடப்பதாக போலீசாருக்கு அவரது மகன் சுனில் என்பவர் தகவல் அளித்தார். இதனால் போலீசார் விரைந்த சென்று சடலத்தை பார்த்தனர்.. அப்போதுதான், மெஹந்திலாலின், அந்தரங்க உறுப்பு வெட்டப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டிருந்ததை கண்டனர்..
எலும்பு முறிவு: பிறகு, சடலத்தை போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பிவைத்தனர்.. அந்த போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டும் வந்தது.. அதில், அவரது விலா எலும்பு முறிந்திருந்ததாம்.. கழுத்து மோசமாக நெரிக்கப்பட்டிருந்ததாம்.. இதனால் ஏற்பட்ட மூச்சு திணறல் காரணமாகவுமே மெஹந்தி லால் இறந்துவிட்டார் என்று ரிப்போர்ட்டில் பதிவாகியிருந்தது.
இதையடுத்து, போலீசாரின் விசாரணை வலுவானது.. கள்ளக்காதலி சிக்கினார்.. அப்போது விசாரிக்கும்போது, பல்வேறு திடுக் தகவல்களை சொல்லி உள்ளார். இதுகுறித்து போலீசார் சொல்லும்போது, “மெஹந்தி லாலும், அந்த பெண்ணும் நீண்ட காலமாகவே ஒன்றாக வசித்து வந்திருக்கிறார்கள்.. ஒரு கட்டத்தில், கள்ளக்காதலியின் மகள் மீதும், மெஹந்தி லாலின் காமப்பார்வை விழுந்துள்ளது.. பிறகு, 2 முறை பாலியல் ரீதியாகவும் இளம்பெண்ணை துன்புறுத்தல் செய்திருக்கிறார்..
கதறி அழுகை: கடந்த 20ம் தேதியன்றும்கூட, நைட் நேரத்தில் தூங்கும்போது, இளம்பெண்ணிடம் அத்துமீற முயன்றுள்ளார்… இந்த டார்ச்சரையெல்லாம் தாங்கிக் கொள்ள முடியாத அந்த இளம்பெண், வேறுவழியின்றி தன்னுடைய அம்மாவிடம் சொல்லி கதறி அழுதுள்ளார்..
இதைக்கேட்டதும், கொந்தளித்து போயுள்ளார் கள்ளக்காதலி.. இதனால் ஆத்திரமடைந்து, மெஹந்தி லாலை கொலை செய்ய முடிவு செய்துள்ளார்.. மறுநாளே, அதாவது 21ம் தேதியன்று, மெஹந்தி லாலுக்கு, மயக்க மருந்து கலந்த மதுவை ஊற்றி தந்துள்ளார்.. அதைக்குடித்துவிட்டு, அவர் போதையில் விழுந்ததுமே அவரை கொடூரமாக கொன்றுள்ளார்..
அந்தரங்க உறுப்பு: அப்போதுதான், மகளிடமே அத்துமீறிய ஆவேசத்தில், அவரது அந்தரங்க உறுப்பையும் வெட்டியுள்ளார்.. பிறகு சடலத்தை ஒரு மூட்டையில் கட்டி, காட்டில் வீசிவிட்டு வந்துள்ளார்..
இந்த கொலையை மகளின் உதவியுடன் செய்ததாகவும் வாக்குமூலத்தில் சொல்லி உள்ளார். எனினும், இந்த கொலையில் வேறு யாருக்காவது தொடர்பு இருக்குமா? என்ற விசாரணையை போலீசார் முடுக்கிவிட்டுள்ளனர். இப்போது, அந்த தாயும் – மகளும் ஜெயிலில் உள்ளனர்…!!!

Leave a comment